அர்ச்சனா வீட்டில் நடந்த விஷேசம். ஒரு வழியாக பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த ஆரி. புகைப்படம் இதோ.

0
1229
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின் ஆரி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை. அதே போல மற்ற போட்டியாளர்கள் போல அடிக்கடி சந்தித்துகொள்ளவும் இல்லை. மற்ற போட்டியாளர்கள் அனைவருமே அடிக்கடி ரீ – யூனியன் வைத்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்த ரீ-யூனியனில் கூட ஆரி பங்குபெறவில்லை. அவ்வளவு ஏன் சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ படத்தை காண பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

- Advertisement -

இந்த சந்திப்பில் பிக் பாஸ் 4-ல் பங்கேற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால், ஆரி, சுச்சி, சனம் ஆகியோர் மட்டும் பங்கேற்கவில்லை. அதே போல இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பகிர்ந்தனர். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இருக்க ஆரி, சனம் மட்டும் அந்த புகைப்படங்களில் இல்லை.

இதுகுறித்து பதிவிட்ட அனிதா சம்பத், சோசியல் மீடியால லைவ்ல வரீங்க சந்தோசம். அப்படியே கொஞ்சம் போன் அட்டன் பன்னிங்கன்னா நல்லா இருக்கும் ஆரி. அணைத்து ஹவுஸ் மேட்சும் உங்களுக்கு போன் செய்தார்கள் என்று நினைக்கிறேன். அழைப்பை நீங்கள் எடுக்கவே இல்லை. இந்த மெசஜை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன் ஆரி என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஒருவழியாக பிக் பாஸ் போட்டியாளர்களுடன், அர்ச்சனாவின் சகோதரி சீமந்த நிகழ்ச்சியின் போது சந்தித்து இருக்கிறார் ஆரி. ஆனால், இந்த நிகழ்ச்சியிலும் சனம் கலந்துகொள்ளவில்லை என்பது போல தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement