விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் எண்ணற்ற பரிட்சயமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் ஆரியும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் முன்னணி வளர்ந்து வருபவர் நடிகர் ஆரி. இவர் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாலை பொழுதின் மயக்கத்திலே, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். அந்த அறக்கட்டளையில் விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளை மேற் கொண்டு வருகிறார் ஆரி. இதற்காக நடிகர் ஆரி அவர்கள் கின்னஸ் புத்தகத்தில் கூட இடம் பிடித்தார். இப்படி ஒரு நிலையில் ஆரி குறித்து அவருடன் ‘எல்லாம் மேல இருக்கவன் பத்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஷ்வி, படப்பிடிப்பில் ஆரி நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

Advertisement

அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் வீட்டில் எப்படி அடுத்தவர்களுக்கு ஆரி அட்வைஸ் செய்கிறாரோ அப்படித்தான் படப்பிடிப்பிலும் இருந்தார். ஆனால் அவர் செய்யும் அட்வைஸ்களை அவர் பின்பற்ற மாட்டார் எனக்கும் நான் அறிமுக நடிகை என்பதால் பல அட்வைஸ்களை செய்திருந்தார் எனக்கு மட்டுமில்லை படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே தினமும் ஏதாவது பாடம் எடுத்துக் கொண்டே இருப்பார் ஒரு முறை மொட்ட ராஜேந்திரன் சாருக்கு கார் ஓட்டுவது போல ஒரு காட்சி சென்று கொண்டிருந்தது. சாருக்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த நாள் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு இருந்தது இதனால் அவர் அன்றைய படப்பிடிப்பை வேகவேகமாக முடித்திருந்தார். ஆனால் அப்போது ஆரி உள்ளே சென்று தூங்கி விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவே இல்லை அந்த நேரத்தில் அவருடைய மேனேஜரும் வெளியில் சென்றுவிட்டார் பின்னர் அவருக்கு பல முறை போன் செய்த பின்னர்தான் அவர் ஒரு வழியாக கதவை திறந்தார்

இன்னொருத்தருக்கு வேறு ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருக்கிறது அவர் அடுத்த நாள் வேறு ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால் நாம் அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும் அவர் நடித்த காட்சிகளை கொஞ்சம் உதவி செய்து நடித்து கொடுத்து சீக்கிரம் முடித்திருக்க வேண்டும் ஆனால் அதன் பின்னரும் ஆரி மிகவும் நிதானமாக வந்து ரெடி ஆகி பின்னர் சூட்டிங்கிற்கு வந்தார் அங்கே நடந்த பிரச்சனை அவருக்கு தெரியும் ஆனால் அங்கு இருப்பவர்களை அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என்று அவருடைய மேனேஜருக்கு போன் செய்து திட்டிக் கொண்டே இருக்கிறார்

Advertisement
Advertisement