விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டுஇருந்தனர் . அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வந்தார்.
இதையும் பாருங்க : யூடுயூப்கர்களை காண்டாகிய அர்ச்சனாவின் பாத் ரூம் டூர் வீடியோ. வீடியோ குறித்து பேசியதால் மதன் கௌரிக்கு காபி ரைட்டா ?
இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தையும் பிடித்தார். ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பகவான் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதே போல ஐஸ்வர்யா தத்தாவுடன் ஆரி நடித்த அலேகா படத்தின் போஸ்டர் கூட வெளியாகி இருந்தது.
அதுமட்டுமல்லாமல் எல்லாம் மேல இருக்கவன் பார்த்துப்பான் என்ற படமும் ஆரி நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் ஆரி உதயநிதி படத்தில் கமிட் ஆனார். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ட்டிகிள் 15’ படத்தின் ரீ-மேக் தான் இந்த படம். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியும் ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.