என் புதிய காதலர். இவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன் – பிக் பாஸ் ஆர்த்தி பதிவிட்ட புகைப்படம்.

0
10346
aarthi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து வருபவர் ஆர்த்தி. இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் நகைச்சுவையாளர், நடன கலைஞர் போன்ற பன்முகங்கள் கொண்டவர். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஆர்த்தி அவர்கள் ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடிகை ஆர்த்தி அவர்கள் ஏற்கனவே தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

- Advertisement -

பின் ஆர்த்தி, கணேஷ்ஷை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் தற்போது வரை இவர்கள் இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆர்த்தி கலந்து கொண்டார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இவர் தனக்கு பிடித்த புகைப்படம் மற்றும் மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பதிவிட்டு வருவார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர் ஒரு ஆணின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது, இவர் தான் என் புது காதலர். இவரை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். இதை ஆர்த்தி அவருடைய கணவருக்கு டேக் செய்துள்ளார். ஆனால், உண்மையில் இது ஒரு ஆணின் புகைப்படமே இல்லை. ஆர்த்தி தன்னுடைய முகத்தை ஃபேஸ் ஆப் மூலம் மாற்றி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ஒரு நிமிடம் ரசிகர்கள் அதிர்ச்சி விட்டார்கள். சமீபத்தில் ஃபேஸ் அப் செயலி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஆண்கள் தங்களை பெண் போலவும், பெண்கள் தங்களை ஆண்கள் போலவும் சித்தரித்து போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement