மற்ற நடிகைகளை போல தலை கீழாக யோகா செய்த ஆர்த்தி. கடைசியில கொடுத்த ட்விஸ்ட் தான் செம.

0
8163
aarthi
- Advertisement -

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் மக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, நர்ஸுகள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர். தற்போது தமிழ் நாட்டில் கொரோனாவினால்  2,526 பேர் பாதிக்கப்பட்டும், 28 பேர் பலியாகியும் உள்ளனர்.

-விளம்பரம்-

இந்தியா முழுதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்த நிலையில் நாளையுடன் (மே 3) ஊரடங்கு நிறைவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தொடர்வதால் மே 4 தேதியிலிருந்து மே 17ஆம் தேதி வரை, அதாவது, மேலும் இரண்டு வாரங்களுக்கு தேசிய அளவில் லாக் டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேற்று வெளியிட்டது.

- Advertisement -

ஊரடங்கு துவங்கியதில் இருந்தே சினிமா முதல் சின்னத்திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் படபடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்குகிறார்கள். மேலும்,பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து தங்களால் முடிந்த வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் பிரபலங்கள் பலரும் பெரும்பாலும் உடற்பயிற்சி அல்லது யோகா சனம் செய்த வீடியோக்களை தான் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான நடிகை ஆர்த்தி சமீபத்தில் தலை கீழியாக நின்றபடி யோகா சனம் செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் ஆர்த்தியா இது என்று பலரும் அந்த வீடியோவை ஆச்சரியத்துடன் உற்று பார்த்து கொண்டிருக்க, பின்னர் ஆர்த்தி தரையில் படுத்தபடி அந்த வீடியோ எடுத்துள்ளது தெரியவந்ததும் பலரும் ஏமாந்து போகினார்கள். அந்த வீடியோவின் இறுதியில் நானும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா சமயத்தில் விழிப்புணர்வு என்ற பெயரில் பிரபலங்கள் உடற் பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருவதை தான், ஆர்த்தி இப்படி மறைமுகமாக கலாய்த்துள்ளாரோ என்னமோ என்று தான் நமக்கு மைண்ட் வாய்ஸ் ஓடுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது மக்களே.

Advertisement