விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்று கோலாகளமாக துவங்கியது. கடந்த நான்கு சீசன் களை போலவே இந்த சீசனிலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் அரசியல் இல்லாத பல்வேறு போட்டியாளர்களை இறக்கி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம். மேலும், பெரிய நடிகர்களோ நடிகைகளோ இந்த சீசனில் இல்லை.
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கின்றனர். நாம் பார்த்த சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 5 செட் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. பசுமை வண்ண காண்செப்ட்களில் இந்த முறை வீட்டை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த முறை வீட்டிற்கு வெளியில் பல இடங்களில் அமர்ந்து பேசுவதற்கு பல இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
மழை பெய்யும்போது பயன்படுத்துவதற்கு குடைகளும் வைக்கப்பட்டிருந்தன. வலது புறத்தில் செடி போன்ற டிசைன் செய்யப்பட்டிருந்த ஒரு நீர் தொட்டிஅமைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக ஜெயில் போன சீசன் போலவே வீட்டிற்கு வெளியே இருக்கும். ஜெயிலுக்குள் கழிப்பறையும் இருக்கும். ஆனால், இந்த முறை நீச்சல் குளத்தை ஜெயிலாக மாற்றி அதை பாதாள சிறை போல மாற்றி விட்டனர்.
சரி, போட்டியாளர்களை பற்றி பாப்போம். ஏற்கனவே சொன்னது போல இந்த சீசனில் பல விதமான புதுமுகங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். மேலும், ஒரு சிலரை நீங்கள் ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போல இருக்கலாம். அந்த வகையில் இந்த சீசனில் பிரபல மாபெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான அபிநய் வட்டி கலந்துகொண்டுள்ளார்.
உலக நாயகன் கமல் திரையுலகில் அறிமுகமானது ஜெமினி கணேசன் நடித்த களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் ஜெமினி கனேசனுடன் பல படங்களில் நடித்த கமல் இறுதியாக அவருடன் ‘அவ்வை ஷண்முகி’ படத்திலும் நடித்தார். இவரை அறிமுகம் செய்த போது நான் இவருக்கு மாமா முறை என்று கூறி இவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்.