பாவனிய லவ் பண்றீங்களா ? ராஜு கேட்ட கேள்வியால் எழுந்த சர்ச்சை – அபினய் வட்டி மனைவியின் பதிவை பாருங்க.

0
696
raju
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எதாவது ஒரு காதல் கதை இருந்துவிடும் ஆனால், இந்த சீசனில் பங்கேற்றுள்ள பெரும்பாலானோர் திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக அக்ஷரா – வருண் இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு தான் இருக்கிறது. அதே போல அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் எதாவது ஒரு சர்ச்சை எழுந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் ராஜு செய்த விஷயம் தான் பேசு பொருளாக ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு truth or dare என்ற விளையாட்டு டாஸ்க்காக கொடுக்கப்பட்டது. மிகவும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த டாஸ்கில், ராஜு பாட்டிலை சுற்றிய போது அபிநய்யிடம் ‘பாவனியை லவ் பண்றீங்களா’ என்று கேட்டது பலரை ஷாக்கில் ஆழ்த்தியது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று திகைத்துப்போனார். அதன் பின்னர் இல்லை என்று கூறினார். இந்த டாஸ்கின் போது ராஜு கேட்டதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : கமல் இல்லாமல் நடந்த எலிமினேஷன். இந்த வாரம் வெளியேறிய நபரை அறிவித்த ரம்யா கிருஷ்ணன்.

- Advertisement -

ஆனால், சிறிது நேரம் கழித்து ராஜு சொன்னது தவறு என்று பலர் கூறினர். அதிலும் குறிப்பாக பிரியங்காவிடம் ராஜு, நான் கேட்டது தப்பா என்று கேட்டதர்க்கு மிகவும் கேவலமான கேள்வி அது என்று கூறி இருந்தார். அத்தெரு போல ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவரையும் கணவரை இழந்த பெண் ஒருவரையும் ராஜு இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அபிநய் வட்டியின் மனைவி எப்படி இருந்தாலும் இறுதியில் நீ எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும். என்னை தவிர உன்னை பற்றி யாருக்கும் தெரியாது. எப்போதும் உன்னை காதலிப்பேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அபர்ணாவின் இந்த பதிவு ராஜுவின் கேள்விக்கு பதிலாக இருப்பது போலவே இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement