கமல் இல்லாமல் நடந்த எலிமினேஷன். இந்த வாரம் வெளியேறிய நபரை அறிவித்த ரம்யா கிருஷ்ணன்.

0
259
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் வார வாரம் எலிமினேஷனில் போட்டியாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் வெளியேறுகிறார்கள். அதே போல கடந்த வாரம் இசை வாணி வெளியேறி இருந்தார்.

- Advertisement -

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பிரியங்கா, இமான், நிரூப், பாவனி, தாமரை, ஐக்கி பெரி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த வாரம் ஐக்கி பெரி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறார்.

கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தற்காலிக தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். அடுத்த சில வாரங்கள் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்குவார். கமல் இல்லாமல் நடக்கும் முதல் எலிமிநேஷன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement