இவ கால வெட்டணும் போல இருக்கு – பெண் செய்துள்ள கொடூர செயலால் எரிச்சலடைந்த அபிராமி.

0
1101
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கு பெற்றவர் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிலையில் நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணை கடுமையாக திட்டி தீர்த்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்தப் பதிவில் இதுபோன்ற நபர்கள் உலகில் வாழவே தகுதி இல்லாதவர்கள். அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் இதற்கு நடவடிக்கை எடுங்கள். இந்த வீடியோ மிகவும் கொடூரமாக இருக்கிறது. இவளது காலை வெட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனது மனது வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அபிராமி, ஒரு வீடியோ லிங்கையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அந்த என்ன வீடியோ என்றால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் ஒரு கொடூரமான வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஒருவர் காருக்குள் நாய்க்குட்டியை தனது காலால் அழுத்தி சித்திரவதை செய்கிறார். மற்றொரு வீடியோவிலும் அதே பெண் இன்னொரு நாய் குட்டியை காலால் சித்ரவதை செய்கிறார். அந்த வீடியோவில் அந்த பெண்ணுடன் இருக்கும் மற்றொரு ஆண் நண்பர் நாய்க்குட்டியை எவ்வாறு சித்திரவதை செய்யும் வேண்டும் என்பதையும் அந்த பெண்ணிற்கு அறிவுறுத்துகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக அந்தப் பெண்ணுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. விசாரணையில் அந்த பெண் லக்னோவை சேர்ந்த பூஜா டிலன் என்பவர் என்று தெரியவந்தது. வாயில்லா பிராணி சித்திரவதை செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்ட அந்த பெண்ணிற்கு எதிராக சமூக ஆர்வலர்களும் வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.

-விளம்பரம்-
https://instagram.com/stories/abhirami.venkatachalam/2385729107201943185?igshid=18701w24vkkbo

மேலும், அந்தப் பெண்மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தார்கள்.இந்த நிலையில் கடந்த புதன்கிழமை விலங்குகள் உரிமை ஆணையத்தை சேர்ந்த காம்னா பாண்டி என்பவர் அந்தப் பெண்மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Advertisement