உடல் எடை கூடி படு குண்டாக மாறியுள்ள அபிராமி – லேட்டஸ்ட் வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
57916
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. கடந்த ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து இருந்தார்.

இதையும் பாருங்க : கடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. அதே போல இந்த லாக் டவுன் நேரத்தில் அபிராமி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதே போல தனது பிட்னஸ்ஸில் கண்ணும் கருத்துமாக இருந்து வரும் அபிராமி கடுமையான உடற் பயிற்சிகளை கூட செய்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் அபிராமியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸில் பார்த்ததைவிட உடல் உடல் கூடி கொஞ்சம் பப்லியாக மாறி இருக்கிறார். தற்போது நடிகை அபிராமி அவர்கள் புதிய அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார் என்று சொல்லலாம். அது வேறு ஒன்னும் இல்லைங்க சென்னை-28, ஆரணிய காண்டம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும், பாடகருமான எஸ்பிபி சரண் இயக்கும் வெப்சிரிஸ்ஸில் நடிகை அபிராமி அவர்கள் இணைந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement