கடந்த 8 மாதமாகவே அவருக்கு இப்படி இருந்தது – வேனுவின் உடல் நலம் குறித்து வாணி ராணி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ.

0
5694
venu

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வேனு அரவிந்தின் நிலை குறித்து அவருடன் வாணி ராணி சீரியலில் நடித்த அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் வேணு அரவிந்த். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-235-590x1024.jpg

சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். கொரோனா தொற்றில் இருந்து இவர் குணமடைந்த சில நாட்களிலேயே இவருக்கு நிமோனியா வந்துள்ளது. மேலும், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ

- Advertisement -

இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு போனதாக செய்திகள் வெளியானது. இதனை நீங்கள் கேட்ட பாடல் தொகுப்பாளர் விஜயசாரதி கூட உறுதிபடுத்தி இருந்தார்.

ஆனால், வேனு அரவிந்த் உடல் நிலை குறைவால் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கோமாவில் இல்லை என்று ராதிகா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வேனுவுடன் வாணி ராணி சீரியலில் நடித்த அருண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் வேனு சாரின் மனைவியிடம் பேசினேன். அவர் கோமாவில் இல்லை. கடந்த 8 மாதங்களாக அவருக்கு சில உடல் நல பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். தற்போது அவர் Icuவில் தான் இருக்கார். ஆனால், கோமாவில் இல்லை. விரைவில் அவர் நலமுடன் வீடு திரும்புவார். அதுவரை எந்த ஒரு வதந்தியும் பரப்பாதீர்கள்.

-விளம்பரம்-
Advertisement