‘அந்த வார்த்தைய கேட்டலே புடிக்கல’ – அபிராமி சொன்னதை கேட்டு முகேன்,அர்ச்சனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
406
abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் அஜித்துடன் இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் அமைந்தது.

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. அதே போல இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தும் முகேனை காதலித்தார்.

ஆனால், முகேன் இவரது காதலை ஏற்கவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அபிராமியிடம் Vj ஷா, நான் அம்பெல்லாம் விட மாட்டேன், அன்பை தான் விடுவேன் என்று சொன்னதும் அந்த அன்புன்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
I Respect Her For Who She Is: Mugen Rao Opens Up About Abhirami! | JFW Just  for women

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் ‘அன்பு ஒன்று தான் அனாதை’ என்று சொன்னது பெரும் பிரபலமானது. அதே போல கடந்த சீசனில் அன்பு கேங் செய்தது எல்லாம் நாம் அனைவரும் பார்த்து இருப்போம். அபிராமியின் இந்த வீடியோவை பார்த்த பலர் அவர் முகேனை சொல்கிறாரா இல்லை அர்ச்சனாவை சொல்கிறாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement