ஸ்கூல் யூனிபார்ம், ரெட்டை ஜடை, ஸ்லிம் உடல் – பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட நமீதா.

0
7162

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை நமீதா. அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நமிதா. தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமிதா. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நமிதாவிற்கு பின் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

இதையும் பாருங்க : கடின உழைப்புக்கும் பலன் கெடச்சிடுச்சி – உடல் எடை குறைத்த புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ.

- Advertisement -

இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமா வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார் நடிகை நமீதா.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லமால் கவலையில் உள்ளார் நடிகை நமீதா.

இதனால் அரசியலில் சேர்ந்தார் நமிதா. கடந்த சில வருடங்களாக பா ஜ கவின் தீவிர நட்சத்திர பேசாளராக இருந்து வருகிறார் நமிதா. இவர் சினிமாவில் ஆரம்பமான புதிதில் ஒல்லியாக தான் இருந்தார். அதன் பின்னர் தான் குண்டாக மாறினார். இப்படி ஒரு நிலையில் இவர் பள்ளிப் பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அடையாளம் தெரியாத அளவு படு ஸ்லிம்மாக இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement