‘எனக்கு கொடுக்கப்பட்ட ஊர் கிழவி என்ற பெயரை வைத்து’ – பிக் பாஸுக்கு பின் Adk போட்ட முதல் வீடியோ.

0
443
vikraman
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி,அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான் என்று 6 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நமிநேசனில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. எந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் தான் நாமினேஷன் மிகவும் தாமதமாக நடைபெற்றது.

- Advertisement -

கடைசி நாமிநேஷன் :

அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இருப்பதால் அவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டார். எனவே, மீதமிருந்த அசிம், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆகிய ஆறு பேருக்குள் மத்தியில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது.இந்த வார நாமினேஷன் முடிவில் நேரடி இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி என ஆறு போட்டியாளர்களுமே நாமினேட் ஆகி இருந்தார்கள்.

வெளியேறிய ADK :

எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விஎழுந்தது. இதில் கண்டிப்பாக விக்ரமன் மற்றும் சிவின் வெளியேற அதிக வாய்ப்பு இல்லை என்று எதிர் பார்க்கப்பட்டது. இறுதியில் ADK வெளியேறினார். ADK ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், அடிக்கடி புறம்பேசி தன் பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.இதனால் நெட்டிசன்கள் பலர் இவருக்கும் ஊர் கிழவி ADK என்ற பட்டமும் கொடுத்து இருந்தனர்.

-விளம்பரம்-

Adk பெற்ற சம்பளம் :

இவர் 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்க்குள் இருந்தார். அதனை வைத்து பார்க்கும் போது குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு 16ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாள் 97 நாட்களுக்கு 15லட்சத்தி 52ஆயிரம் ரூபாய் வருகிறது. மேலும் பணப்பெட்டி டாஸ்கில் 20 லட்சம் வரை இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி Adk முதல் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

முதல் பதிவு :

தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் பேசும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றிகள் என்றும் உண்மையாக இருக்கும். வீட்டிற்குள் எனது திறமையை வெளிப்படுத்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய @vijaytelevision மற்றும் Biggboss Season 6க்கு நன்றி. ஒரு எபிசோடில் பயன்படுத்திய தொப்பியை பரிசளித்த @ikamalhaasan ஐயாவுக்கு எனது மிகப்பெரிய மரியாதை. இந்த தியாகத்தை நான் ஒருபோதும் அவமானமாக எடுத்துக் கொள்ள மாட்டேன், ஆனால் அதை ஒரு நேர்மறையான குறிப்பில் ஒரு போக்காக மாற்றுவேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

விக்ரமன் குறித்து ADK :

எனக்கு கொடுக்கப்பட்ட ஊர் கிழவி என்ற பட்டத்தை வைத்து ஒரு பாடலை உருவாக்கி அதன் மூலம் அந்த பெயரை நல்லபடியாக மாற்றுகிறேன் என்று குறியுள்ளார். மேலும், விக்ரமன் குறித்து பதிவிட்டுள்ள அவர் ‘விக்ரமன் உண்மையான நண்பன். அவருடைய நட்பை நான் என்றும் போற்றுவேன். நான் கலவையான உணர்ச்சிகளுடன் வெளியேறினேன், வேண்டுமென்றே அவரை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை.

Advertisement