ஆரியை தொடர்ந்து பைனலுக்கு நுழைந்த அடுத்த போட்டியாளர். ஆரியை போலவே தரையை தட்டி கண்ணீர்.

0
1194
aari

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 13 வாரங்களை கடந்து 14 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.

கடந்த வாரம் ரியோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் அவரை நாமினேட் செய்ய முடியாது என்று பலரும் நினைத்தனர். இறுதி வாரத்தில் ரியோவை கேப்டனாக்கி அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப விஜய் டிவி திட்டமிட்டுவிட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தது. அதே போல இந்த வாரம் நாமினேஷன் கூட நடைபெற்றது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இந்த முறை அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு உள்ளதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

எனவே, யார் யார் இறுதி போட்டிக்கு செல்வார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் டிக்கெட் டு பினாலேக்கான போட்டிகளும் நடைபெற்றது. இதில் நேற்றோடு இறுதி போட்டி முடிந்த நிலையில் சோம் சேகர் அதிக புள்ளிகளை பெற்று டிக்கட் டு பினாலே டாஸ்கை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். நேற்றய நிகழ்ச்சியில் அவருக்கு Ticket To Finaleகான முத்திரை வழங்கப்பட்டு இருந்தது.

சோம் சேகரை தொடர்ந்து ஆரி இந்த வாரம் காப்பாற்றப்பட்டு இருப்பதாக அறிவித்தபோது தரையில் தனது கையால் தட்டி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஆரி. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாலாஜி மூன்றாம் பைனலிஸ்ட்டாக சென்றுள்ளார் என்று கமல் அறிவித்த போது ஆரியை போலவே தரையை தட்டிய பாலாஜி கண்ணீர் கடலில் ஆழ்ந்தார்.

-விளம்பரம்-
Advertisement