அம்மா இறந்துட்டாங்க..! ஐஸ்வர்யா சொன்ன பொய்.! வசமாக மாட்டிவிட்ட ஷாரிக்.! உண்மை நிலை இதோ

0
299
aishwarya

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் தலைவியாக இருந்த ஐஸ்வர்யாவின் செயல்கள் தான் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. கடந்த வாரம் ஐஸ்வர்யாவிற்கு ராணி டாஸ்க் கொடுத்த போது பாலாஜி மீது குப்பை கொட்டியது தான் ஐஸ்வர்யா மீது ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.

Aishwarya-dutta

பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கான காரணத்தை டேனி மற்றும் ஜனனியிடம், ஐஸ்வர்யா கூறிய போது அவங்க என்னோட அம்மவை பத்தி பேசினது என்னோட மைண்ட்-ல இருக்கு. ஷாரிக்கையும் என்னையும் பற்றி பேசறாங்க.ஷாரிக் பேமிலி பெரிசு தான் ஆனால் எனக்கு பேமிலி இல்ல.அவங்களுக்கு (பாலாஜி)என்னுடைய கண்டிஷன் தெரியுமா? நான் என்னுடைய அம்மவுடன் இருந்தது இல்லை. என் அம்மா இறந்து விட்டார்கள் அது அவருக்கு தெரியுமா’ என்று கூறியிருந்தார்.

அதேபோல சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது போட்டியாளர்கள் யாரை மிகவும் மிஸ் செய்கின்றனரோ அவர்களுக்கு ஒரு கடிதமும், ஒரு ஹார்ட்டும் அனுப்பலாம் என்று டாஸ்க் கொடுப்பட்டு இருந்தது. அப்போது கூட ஐஸ்வர்யா ‘எனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லை, அவங்கள பாத்து 9 மாசத்துக்கு மேல ஆச்சி அவங்களுக்கு ‘ என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் தவளை தனது வாயால் கேடும் என்பது போல தனது அம்மா உயிரோடு இருக்கிறார் என்ற விடயத்தை உறுதி செய்த்திருகிறார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷாரிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யா தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார், அவருக்கு அம்மா மட்டும் தான் இருக்கிறார் என்றும், அவரை பிரிந்து 6 வருடங்கள் தனியாக வாழ்ந்து வருகிறார் என்றும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் ஐஸ்வர்யா கூறியதாக ஷாரிக் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Balaji-Aishwarya

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா, ஷாரிக்கிடம் எந்த அளவிற்கு நெருக்கத்தில் இருந்தார் என்பது தெரியும். அவரிடம் தான் தனது அம்மா உயிரோடு இருக்கிறார் என்பதை ஐஸ்வர்யா தனிப்பட்ட முறையிலே கூறியுள்ளார். ஆனால், பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கான காரணத்தை கூறும் போது மட்டும் தனது அம்மா இருந்து விட்டார் என்று கூறியிருந்தார். ஆனால், தனது அம்மாவை வைத்து மக்களின் பரிதாபத்தை சம்பாதித்து வாக்குகுகளை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா இப்படி மாறி மாறி பேசியுள்ளது அவர் மீது மேலும் எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது.