ஐஸ்வர்யா செய்தது சரியா..! இப்படி பேசலாமா..! கேவலமாக பேசும் ஐஸ்வர்யா..?

0
103
Aishwarya-Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்பது கட்டாய விதியாக இருந் வருகிறது, ஆனால், இந்த விதியை ஆரம்பத்தில் இருந்தே ஐஸ்வார்யாவும், யாஷிகாவும் மீறி வருகின்றனர். அதனை கமலும் பல முறை கண்டித்துள்ளார்.

Mumtaj

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது யாஷிகா மற்றும், ஐஸ்வர்யாவிடம் ‘இதில் ஒரு ரூல் இருக்கிறது. தமிழில் பேசக்கூடாது என்று. ஆனால், நடுவில் கொஞ்சம் சட்ட விரோதமாக இந்தியில் பேசிக்கொண்டு இருந்தீங்க அது என்னனு கொஞ்சம் சொல்லுங்களே ‘ என்று கேட்கிறார்.

- Advertisement -

அதற்கு ஐஸ்வர்யா , எனக்கு கொஞ்சம் கோவம் வந்துடிச்சி அப்போ பொன்னாபலம் பற்றி தான் பேசினேன், ஆனா என்ன பேசினேன் என்று ஞாபகம் இல்ல என்று யாஷிகாவை பார்த்து கூற அதற்கு உடனே யாஷிகா ‘தெரியாது எதோ ப்ளோல வந்துடிச்சி’ என கூறுகிறார். அதற்கு கமல் நல்லவேளை நீங்கள் ஒதுக்கிடீங்க இல்லனா முதல் குறும்படம் உங்களோடதா இருந்திருக்கும் என்றார்.

aishwarya

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் பொன்னம்பலத்தை இந்தியில் ‘புட்டா’ என்று கூறியிருந்தார். ‘புட்டா’ என்றால் தமிழில் கிழவன் என்று அர்த்தம். ஐஸ்வர்யா, பொன்னம்பலத்தை இப்படி திட்டியதற்கு காரணமே நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யா செய்யும் பல அநாகரீக செயல்களை பொன்னம்பலம் கண்டித்துள்ளார்.

Aishwarya

ஆனால், பொன்னம்பலம் நவீன கலாச்சாரத்தில் பிறந்தவர் அல்ல. அவரது காலகட்டத்தில் இருந்த பெண்களின் கலாச்சாரம் வேறு, அதனை மனதில் கொண்டு நல்ல எண்ணத்தில் தான் அவர் ஐஸ்வர்யாவிற்கு பல அறிவுரைகளை கூறினார். இருப்பினும் ஐஸ்வர்யா தமிழ் கலச்சாரத்திற்கு ஒற்றி போகாததே இந்த பிரெச்சனைகளுக்கெல்லாம் முழு காரணமாக இருந்து வருகிறது.

இருப்பினும் ஐஸ்வர்யா,பொன்னம்பலம் கூறிய அறிவுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததோடு அவரை வயதில் மூத்தவர் என்றும் பார்க்காமல் ‘கிழவன்’ என்று கிண்டலடித்துள்ளார். அதோடு பிக் பாஸ் விதிகளை தொடர்ந்து மீறி வரும் ஐஸ்வர்யா இன்னமும் ஆங்கிலத்தில் தான் பேசி வருகிறார். சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் வைஷ்ணவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஐஸ்வர்யா ‘i dont care’ என்று ஆங்கிலத்தில் கூச்சலிட்டு வருகிறார்.

Ponnambalam

உடனே யாஷிகா தமிழில் சொல்லு என்று கூற ‘எனக்கு கவலை இல்லை’ என்று கத்திக்கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மற்ற போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வருவதும், சாதுவாக இருந்த ஐஸ்வர்யா தற்போது மாறிவருகிறார்..

Advertisement