பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டியை நெருங்கியுள்ளது , இந்த இறுதி போட்டியில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் பிக் பாஸ் பட்டதை வெள்ளபோவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாக உள்ளது. கடந்த வாரம் ஞாயிற்று கிழமை முதல் வாக்கெடுப்புகள் துவங்கபட்ட நிலையில் ரித்விக்காவிற்கு தான் அதிகபடியான வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த சில வரத்திலேயே ஐஸ்வர்யா வெளியேற்றபட வேண்டும் என்று மக்கள் நினைத்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து காப்பற்றபட்டு வந்து இன்று இறுதி போட்டி வரை வந்துள்ளார். ஐஸ்வர்யா வெளியேறாமல் இருப்பதால் அவரை பிக் பாஸ் செல்ல பிள்ளையாக பார்த்து வருகிறார் என்று பலரும் கூறிவந்தனர். அவ்வளவு ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சின் முன்னாள் போட்டியாளரான ஆர்த்தி, ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் மருமகள் என்று அடிக்கடி கிண்டல் செய்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற படலாசிரியரும்,பிக் பாஸ் நிகழ்ச்சின் முன்னாள் ரன்னர் அப்பான கவிஞர் சினேகனிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பற்றபட்டு வருவதற்கான காரணத்தை கேட்ட போது அதற்கு பதிலளித்த சினேகன், 13 வயதிலிருந்தே ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்,அதை அவரது வாயால் சொல்லி இருக்கிறார்.எண்டமோல் நடத்தப்பட்ட இரண்டு மூன்று நிகழ்ச்சிகளுக்கு அவர் சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார்,இதையும் அவரது வாயால் சொல்லி இருக்கிறார் என்று சினேகன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

சினேகன் கூறியதிலிருந்தே ஐஸ்வர்யா இத்தனை வாரம் எதனால் காப்பாற்றபட்டு வருகிறார் என்பதற்கான ஒரு காரணம் புலப்படுகிறது. நம்மில் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தான் தயாரித்து வருகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் சினேகன் குறிப்பிட்டுள்ள எண்டமோல் Endemol என்ற பன்னாட்டு நிறுவனம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை மையமாக வைத்துத்தான் துவங்கபட்டது. பிக் பிரதர் நிகழ்ச்சியை தயாரித்ததும் இதே எண்டமோல் Endemol நிறுவனம் தான். சினேகன் கூறியதை வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யா எண்டமோல் Endemol நிறுவனத்திற்கு ஏற்கனவே பரிட்சியமான ஒரு நபர் தான் அதனால் தான் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் தக்கவைத்து வருகின்றனரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement