‘பவானி அமீர்’ முத்தத்தை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய ‘வருண் அக்ஷரா’ முத்தம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ.

0
831
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 79 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீடும் காதலும் :

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

பாவனியும் கிசுகிசுவும் :

இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தற்போது அபிநய்யை தொடர்ந்து பாவனியிடம் கடலை போட்டு வருவது அமீர் தான். அதிலும் பாவனியை காதலிப்பதாக சொன்ன அமீர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு முத்தம்கொடுத்தார் .

அமீர் – பாவனி முத்தம் :

பாவனியே எதிர்பார்க்காத நேரத்தில் அமீர் முத்தம் கொடுத்து இருந்தது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்தது. ஆனால், பாவனி – அபிநய், பாவனி – அமீர் கிசுகிசுக்களுக்கு முன்னரே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்ட ஜோடி என்றால் அது வருண் – அக்ஷரா ஜோடி தான். இவர்கள் இருவரும் பிக் பாஸுக்கு வரும் முன்னரே ஜிம் பார்ட்னர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அக்ஷரா – வருண் உறவு :

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கு எதோ ரொமான்ஸ் சென்று கொண்டு இருப்பது போல தான் சக போட்டியாளர்கள் பேசிக்கொண்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறிக்கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அக்ஷரா, வருணுக்கு முத்தம் கொடுத்து இருந்தது ரசிகர்களை ஷாக்கடைய வைத்துள்ளது.

அக்ஷரா கொடுத்த முத்தம் :

நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க்கில் இருந்து சிலர் வெளியேறிய நிலையில் டாஸ்க்கில் இருந்தவர்கள் மட்டும் ஹாலில் தூங்கி கொண்டு இருந்தனர் அதில் வருணும் ஒருவர். அப்போது பெட் ரூமிற்க்கு தூங்க சென்ற அக்ஷரா, வருணின் காதுக்கு அருகில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement