கேரளா தங்க கடத்தல் விவகாரத்தில் அக்ஷரா ரெட்டி குறித்த செய்திகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து உள்ளது. வழக்கம் போல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கியது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் என்னை கார்னர் செய்கிறார்கள் என்று அக்ஷரா ரெட்டி புலம்பி அழுதார். பின் கடந்த வாரம் கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை பகிர்ந்தார்கள்.
அதில் அக்ஷராவும் தன் தந்தையின் மறைவு குறித்து உணர்வுபூர்வமான சில விஷயங்களைப் பேசி இருந்தார். இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் கேரள தங்க கடத்தல் வழக்கில் அக்ஷராவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான வீடியோ தற்போது வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் வழக்கில் அக்ஷரா ரெட்டி பெயர் அடிபட்டு இருக்கிறது. இதனால் சோசியல் மீடியா முழுவதும் அக்ஷரா ரெட்டி குறித்து பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. இந்நிலையில் தற்போது 2013 ஆம் ஆண்டில் நடந்த தங்க கடத்தல் தொடர்பாக அக்ஷரா ரெட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அக்ஷரா ரெட்டி கூறியது, தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும். அதனால் சிபிஐ என்னையும் அழைத்து விசாரித்தார்கள்.
எனக்கு தெரிந்த தகவல்களை நான் சொல்லி விட்டேன். நான் துபாய் எல்லாம் அடிக்கடி செல்லவில்லை. என் பாஸ்போர்ட்டை வேண்டுமானாலும் செக் பண்ணிக் கொள்ளுங்கள். எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் அக்ஷரா ரெட்டியின் பெயர் மாற்றத்திற்கும், முகம் சர்ஜரிக்கும் காரணம் என்ன என்று அக்ஷரா ரெட்டிக்கு நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் விசாரித்தபோது கூறியது, பயாஸ் என்பவர் மாடல்களுக்கான பி ஆர் ஓ. அக்ஷரா மாடலிங் செய்ததால் அக்ஷராவின் தோழிகள் மூலமாக பயாஸ் அறிமுகமானார்.
அதை அக்ஷராவும் மறுக்கவில்லை. தங்க கடத்தல் விவகாரத்தில் அக்ஷரா பெயர் சிக்கியது உண்மைதான். பயாஸ் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களை எல்லாம் சிபிஐ விசாரித்து இருந்தது. அதில் மொத்தம் 238 பேர்களை சிபிஐ விசாரித்தது. இதில் அக்ஷரா ரெட்டியும் ஒருவர். ஆனால், அக்ஷராவும் இந்த தங்க கடத்தலுக்கும் சம்பந்தமில்லை. அக்ஷரா பெயர் மாற்றம் செய்து இருப்பதாக காரணம் நியூமராலஜிகளுக்காகத் தான் செய்யப்பட்டது.
விஜய் டிவியில் இது இவருக்கு இரண்டாவது நிகழ்ச்சி. 2018 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான் வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியின் போது அக்ஷரா என்ற பெயரில் தான் அவர் கலந்து கொண்டிருந்தார். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. மேலும், அக்ஷரா பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து கொள்ளவில்லை. உடல் எடையை குறைத்திருக்கிறார். அதனால் முகத் தோற்றம் மாறி இருக்கிறது. இதுதான் உண்மை. அக்ஷரா குறித்து சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகள் எல்லாமே பொய் என்று கூறியிருக்கிறார்கள்.