பொதுவாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் டிஆர்பி ரேட்டிங்க்காக பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை முந்திக்கொண்டு பிரபல சேனலின் சீரியல் முன்னிலையில் வகிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது வாரம் டிஆர்பியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் முந்தி இருக்கிறது. மேலும், நேற்று வெளியான டிஆர்பியில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இதை சன் டிவி சேனல் பயங்கரமாக கொண்டாடி வருகிறது. மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியமான ஒன்று டிஆர்பி தான். அதை வைத்துதான் சீரியல், நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்வதும் நிறுத்தப்படுவதும் காரணம்.
அதிலும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்கள் ஒளிபரப்பாகும் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி இருந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே விஜய் டிவி எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும். இதைத் தடுத்து நிறுத்துவதற்காக தான் இந்த முறை சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியும், ஜீ தமிழில் சர்வைவர் நிகழ்ச்சியும் கொண்டு வந்திருந்தார்கள்.
ஆனால், இந்த ரெண்டு நிகழ்ச்சியையும் முந்திக்கொண்டு பிக்பாஸ் சென்றிருந்தது. பின் சன் டிவி 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த பூவே உனக்காக என்ற தொடரை 10 மணிக்கு மாற்றி பிக்பாஸ் நேரத்தில் ஒளிபரப்பினார்கள். இந்த தொடரில் ஹீரோயினியாக ராதிகா பிரீத்தி நடித்துக் கொண்டிருந்த நிலையில் சாயா சிங்கை இன்னொரு ஹீரோயினியாக களம் இறக்கி பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் 8 மணி சீரியலை 10 மணிக்கு ஒளிபரப்பியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் சன் டிவி எதிர்பார்த்த பலன் தற்போது கிடைத்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த தொடரின் டிஆர்பி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிகம்.
மேலும், பிக் பாஸ் சீசன் 5 டிஆர்பியில் பின்தங்கி இருப்பதற்கான காரணம் குறித்து சிலர் கூறி இருப்பது, இந்த சீசன் வர்த்தகரீதியாக சுமாராக தான் போகிறது. தமிழில் முதன்முதலில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது யாரும் எதிர்ப்பார்க்காத நிகழ்ச்சி என்பதால் டிஆர்பியை அள்ளி குவித்து இருந்தது. அதிலும் ஓவியா பிரபலமான உடன் அந்த நிகழ்ச்சி சூடுபிடித்தது. முதல் சீசன் வெற்றி இரண்டாவது சீசனுக்கு வெற்றியாக அமைந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் போட்டியாளர்கள் சிலரின் செயல்பாடுகள் சர்ச்சைகளால் நிகழ்ச்சிக்கு விளம்பரமும் வரவேற்பும் கிடைத்தது.
ஆனால், இந்த ஐந்தாவது சீசன் சேனலுக்கு பெரிய ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறது. அதற்கு ஒரு காரணம் போட்டியாளர்கள் பலரும் புதுமுகங்களாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். 65 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் மிஞ்சி இருக்கும் நாட்களில் பிக்பாஸ் சூடுபிடித்து மக்கள் மத்தியில் விருவிருப்பாக செல்லுமா? டி ஆர் பியில் முந்தி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.