தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தன்னுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. ஆனால், நடிகர் விஜயின் மூலம் சென்ற வாரம் தனது TRP யில் சறுக்களை கண்டுள்ளது பிக் பாஸ்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள், விஜய் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட அதிக பார்வையாளர்கள் கண்டுகளிக்க ஒரு நிகழ்ச்சி என்றும் கூறலாம். ஆனால், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெற்ற அளவிற்கு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறிவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 16 முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அதிகம் கண்டுகளித்த தொலைக்காட்சி பட்டியலில் விஜய் டிவி இரண்டாவது இடத்திலும், சன் டிவி முதல் இடத்திலும் உள்ளது. அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நேரத்தின்(இரவு 9 மணி) போது ரசிகர்கள் கண்டுகளிக்கும் டாப் 5 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

Advertisement

Advertisement

அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சன் டிவியில் ‘தெறி’ படம் ஒளிபரப்பப்பட்டது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட அதிமான பார்வையாளர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெறி’ படத்தை தான் அந்த நேரத்தில் கண்டு களித்துள்ளனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட விஜயின் தெறி படத்திற்கே மாஸ் கிடைத்துள்ளது.

Advertisement