‘நான் வெளியேறியத என்னாலே நம்ப முடியல’ தான் வெளியேற்றதற்கு இந்த போட்டியாளரின் ரசிகர்கள் தான் என்று நம்பும் அனிதா.

0
253
anitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-113.png

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமூக வலைதளத்தில் பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் கடந்த இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்துவந்தார்.

- Advertisement -

வெளியேறிய அனிதா :

ஜூலியை தொடர்ந்து தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர். எனவேய, சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருந்தார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.

வெளியேற்றம் பற்றி பேசிய அனிதா :

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மேடையில் பேசிய அனிதா, அனிதா தான் முன்பு பிக் பாஸ் வந்து சென்றபிறகு சந்தித்த மோசமான abuses மற்றும் ட்ரோல்கள் பற்றி மிகவும் உருக்கமாக பேசினார். அதே போல வெளியேறுவதர்க்கு முன் அனிதா பிக் பாஸ் வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். இந்த எலிமினேஷன் எப்படி என எனக்கு புரியல, நான் நன்றாக தான் விளையாடினேன், நான் வெளியேறத என்னாலே நம்ப முடியல என்ன காரணமாக இருக்கும் என்று புலம்பி கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பாலாஜி ரசிகர்களை குறை சொன்ன அனிதா :

அதன் பின் பாலாவை பார்த்து, ‘உன் ரசிகர்கள் தான் என்னை வெச்சி செஞ்சிருப்பாங்க. எலிமினேஷனுக்கு அது தான் காரணம்’ என கேட்டார் அனிதா. அப்படி எல்லாம் இருக்காது என பாலாஜி கூறினார். இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் Bioவையும் மாற்றி இருக்கிறார் அனிதா. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்வதற்க்கு முன்பாக தனது இன்ஸ்டகிராம் bioவில் ‘பெருங்கனவுகளை சுமந்து முன்னேறும் சாமானிய பெண்களின் பிரதிநிதியாக BB Ultimate-ல் என்று பதிவிட்டு இருந்தார்.’ என்று குறிப்பிட்டு இருந்தார் அனிதா.

This image has an empty alt attribute; its file name is 1-424-519x1024.jpg

Bioவை மாற்றிய அனிதா :

ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ‘உங்களுக்காக நீங்கள் தான் நிற்க வேண்டும், வேறு யாரும் நிற்க மாட்டார்கள் என்று குறியிட்டு இருக்கிறார்.‘ என்று கூறிப்பிட்டு இருக்கிறார். அனிதாவின் இந்த பதிவின் மூலம் அவருக்கு இந்த சீசனில் தான் ஆடிய விதம் பற்றியும் தனது பெயர் டேமேஜ் ஆனது பற்றியும் புரிந்து இருக்கிறது என்றே தான் தெரிகிறது. இம்முறை அதனை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement