அவர் இப்போ என்ன கேட்டுட்டார்னு இப்படி Rude ஆ பேசுறீங்க – அனிதா சம்பத்திற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.

0
1246
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

இதையும் பாருங்க : அந்த விஜய் பாட்டில் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – ஷாக் கொடுத்த அஜித்தின் ஜோடி நடிகை.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் ஆடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், உங்களோட லட்சியம் (செய்தி வாசிப்பு) நீங்கள் இழந்துவிடீர்கள். தவறாக சொல்லி இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் தன்மையாக கூறி இருந்தார். அதற்கு அனிதா சம்பத், ஆமாம், தப்பு தான். இது என்னோட முடிவு என்னோட லட்சியத்தை பற்றி உங்களுக்கு ஒன்னும் தெரியாது. மற்றவர்களை எடை போடுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் மிகவும் தன்மையாக தான் சொன்னார், அதற்கு இப்படி கடுமையாக பதில் கூறுவதா என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement