அந்த விஜய் பாட்டில் ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன் – ஷாக் கொடுத்த அஜித்தின் ஜோடி நடிகை.

0
1587
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவருடன் நடித்துவிட மாட்டோமா என்று பல நடிகைகள் ஏங்கி கொண்டு இருக்கின்றனர். அதே போல விஜய் நடனத்தை பற்றி சொல்லவா வேண்டும். விஜய்யுடன் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பல நடிகைகள் கூட இருக்கின்றனர். மீனா, சிம்ரன், நயன்தாரா என்று பல நடிகைகள் விஜய் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிரபல நடிகையான மாளவிகா கூட விஜய்யுடன் ஒரே ஒரு பாடலில் வந்திருப்பார். தமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

இதையும் பாருங்க : அட, பல ஆண்டுகளுக்கு பின்னர் சீரியலில் என்ட்ரி கொடுத்த விருமாண்டி பட நடிகை – இதோ ப்ரோமோ.

- Advertisement -

அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

அஜித்துடன் இரண்டு படங்களில் நடத்தாலும் இவருக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் குருவி படத்தில் இவர் ‘டன்டானா டர்னா’ பாடலில் வந்திருப்பார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா, அந்த படத்தின் போது தான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் தான் அந்த பாடலில் தான் நடனமாடும் சும்மா நடந்துகொண்டு மட்டுமே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அவருடன் நடனமாடாதது தனக்கு வருத்தம் தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement