விவேக் அறிமுகமான முதல் படத்தில் அவரின் தம்பியான நடித்துள்ள நடிகர் கணேஷ்கர். அவரே பகிர்ந்த அறிய புகைப்படம்.

0
1021
Vivek
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த சில தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் விவேக்குடன் சிறு வயதில் முதன் முதலாக நடத்த படத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிரபல நடிகரும் நடிகை ஆர்த்தியின் கணவருமான கணேஷ்கர்.

- Advertisement -

தமிழ் சினிமவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் கணேஷ்கர். விவேக், வடிவேலு, சந்தானம் என்று பல்வேரு நடிகர்களின் காமெடிகளில் வரும் இவர் சிறு வயது முதலே நடித்து வருகிறார். பல ரஜினி படங்களில் சிறு வயது ரஜினியாக கூட நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விவேக் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் இவர் விவேக்கின் தம்பியாக நடித்துள்ளார்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் பாலசந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதே படத்தில் தான் நடிகர் கணேஷ்கரும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படி ஒரு நிலையில் அந்த படத்தில் இவரும் விவேக்கும் நடித்த காட்சியின் புகைப்படத்தை பகிர்ந்து விவேக் பற்றி உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement