விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதி போட்டிக்கு ஷெரின் , சாண்டி, லாஸ்லியா, முகென் என்று 4 பேர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும், இந்த பேரில் வெற்றியாளரை தேர்தெடுக்கும் வாக்கப்பதிவும் இந்த வாரம் படு மும்மரமாக நடைபெற்றது. மேலும், இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான போட்டியாளராக இருந்து வந்தவர் கவின். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே பலரும் தெரிய வந்தது.
இதையும் பாருங்க : லாஸ்லியா ஹேட்டர்ஸ் தான் அவர் வாயை கிண்டல் செய்கிறார்கள் என்றால், முகென் மலாயில் எழுதியே காண்பிச்சிட்டாரு.!
பிக் பாஸில் பங்குபெற்ற கவின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளில் பஞ்சாயத்துகளிலும் சிக்கி வந்தார். மேலும், இந்த சீசனில் அதிகம் நாமினேட் ஆன் நபரும் இவர்தான். இருப்பினும் இவர் நாமினேட் ஆன ஒவ்வொரு வாரமும் ஓட்டிங்கில் இவர் தான் முதல் முதல் இடத்தில் இருந்து வந்தார். இதனால் கவின் தான் இந்த சீசனை வெற்றி பெற கோகிறார் என்று கவினின் ஆதரவாளர்கள் நினைத்து வந்தனர். ஆனால், கடந்த சில வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை ஏற்றுக்கொண்டு கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் பிக் பாஸ் கவின் மற்றும் சிலருக்கு விருதுகளை அறிவித்துள்ளது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் மேடையில் போட்டியாளர்களுக்கு சில பட்டன்களை அளித்து விட்டு செல்வார்கள். ஆனால், இந்த சீசனில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் இன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் சிலருக்கு பிக் பாஸ் சார்பாக சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும். இந்த சீசனை கொஞ்சம் சுவாரசியமாக கொண்டு சென்றது ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் தான்.

அதில் வனிதா கவின் மிகவும் முக்கிய பங்கினை வகித்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்போதும் வனிதா சர்ச்சையாக மற்றும் ஒரு போட்டியாளராக இருந்துது வந்தார். ஆனால், கவின் அழகான காதல் கதையை ஓட்டி வந்து ஒட்டுமொத்த இளசுகள் கவனத்தியும் ஈர்த்தார். சொல்லப்போனால் பிக் பாஸ்ஸின் பல எபிசொட்கள் கவினின் ரொமான்ஸ் தான் கொஞ்சம் சுவாரசியமா கொன்டு சென்றது என்று கூறினாலும் அது மிகையாகாது. இதனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சில விருதுகளை அறிவித்துள்ளார் .
அதில் கவினுக்கு - Game changer (ஆட்டத்தையே மாற்றியமைப்பவன்) வனிதா - Guts And Grit (தைரியமானவள்), சேரன் - ஒழுக்கமானவர் , சாண்டி - சிறந்த தோழர், தர்ஷன் - சகலகலா வல்லவன் என்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்று நடைபெற உள்ள இறுதி போட்டியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களலும் பங்குபெறுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கவின் வருவாரா இல்லையா என்பது சதேகமாக இருக்கிறது.




