எப்படி தந்தையுடன் இப்படி போஸ் கொடுப்பீங்க. பிக் பாஸ் அனுயா புகைப்படத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.

0
170371
anuya
- Advertisement -

நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடியாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுயா. சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட இவருக்கு தமிழ் ரசிகர்களும் உருவாகினார்கள்.

-விளம்பரம்-

இருப்பினும் இவருக்கு முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் நடித்திருந்தார்.. ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் நகரம் படத்தில் நடித்திருந்தார். சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தியது.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரபல நடிகரின் மகனுடன் தனியாக யாஷிகா டேட்டிங்? வைரலாகும் புகைப்படம்.

பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை ரசிகர்கள் மீண்டும் தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் தொலைக்காட்சி பக்கம் நடுவராக சென்றுவிட்டார். தற்போது இவரை தொலைக்காட்சிகளில் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி.அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, என் அணைத்து சோகங்களையும் பகிர்ந்து கொள்ளும் தந்தை. என் அப்பா தான் என் உலகம் என்னுடைய பிராண வாயு என்னை போன்று புதிரான மகளை பெற்றவர் சிரிப்பது கொஞ்சம் கடினம் தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தில் கையில் ஒரு கிளாசுடன் இருக்கிறார் அனுயா.

இதனை சுட்டி காட்டி வரும் நெட்டிசன்கள், என்ன தந்தையுடன் பீரா, எப்படி தந்தையுடன் பீருடன் இருக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இருக்கும் நவ நாகரிக உலகத்தில் மது அருந்துவது என்பது ஆண், பெண் என்று பேதமில்லாமல் ஒரு சகஜமான விஷயமாகிவிட்டது. ஆனால், பெற்ற தந்தையுடனே இப்படி பீர் குடிக்கும் புகைப்படத்தை பதிவிடுவது சுதந்திரமாக பார்க்க முடியுமா என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும்.

Advertisement