பிரபல நடிகரின் மகனுடன் தனியாக யாஷிகா டேட்டிங்? வைரலாகும் புகைப்படம்.

0
119029
Yashika
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜோம்பி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

இதையும் பாருங்க : காமெடி மன்னன் கவுண்டமணியா இது. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

-விளம்பரம்-

அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் நடிகர் உமாபதி அவர்களுடன் டேட்டிங் சென்று உள்ளார். டேட்டிங் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

2018 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மணியார் குடும்பம். இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் நடனம் ஆடி இருந்தார்.

இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் போட்ட குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் நடிகர் உமாபதி ராமையா இருவரும் சேர்ந்து ரெஸ்டாரன்ட், போட்டிங் ரைட் என்று பல இடங்களுக்கு சென்று உள்ளார்கள். அப்போது அவர்கள் இருவரும் சென்ற போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா?? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தற்போது இவர் மஹத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் யாஷிகா . இதனை தொடர்ந்து நடிகை யாஷிகா ராஜபீமா என்ற படத்தில் ஒரு செய்தியாளராக நடித்து உள்ளார்.

Advertisement