இவரோட இசையில் பாடல் எழுதுவது தான் எனக்கு கடினம்..! வைரமுத்து

0
366

வைரமுத்துவின் வரிகள் மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை இது இரண்டும் சேர்ந்தால் இசை பிரியர்களுக்கு வேறு என்ன வேண்டும். இவர்கள் இருவரும் எண்ணெற்ற பாடல்களில் பணி புரிந்து விட்டனர். ஏ ஆர் ரகுமானின் இசை தாளில் வைரமுத்துவின் வரிகள் செய்த வர்ணஜாலங்கள் ஏராளம்.

Vairamuthu

ஏ ஆர் ரகுமான் முதன் முறையாக இசையமைத்த “ரோஜா” படம் தொடங்கி கார்த்திக் நடித்த “காற்று வெளியிடை” வைரமுத்து பல்வேறு ரகுமான் பாடலுக்கு வரிகளை எழுதி கொடுத்துள்ளார். தற்போது சிறிது கால இடைவேளைக்கு பிறகு “செக்க சிவந்த வானம் ” படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பிற்கு பாடல் எழுதுவது குறித்து பேசியுள்ள வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ட்யூனுக்கு பாடல் எழுதுவது கடினம். அதிலும் ரகுமானின் ட்யூனை உள்வாங்கிக் கொள்வது மிகவும் கடினம். காற்றை எப்படி கைகளால் பிடிக்க முடியாதோ அதேபோலதான் , ரகுமான் ட்யூனும். அவரது ட்யூனில் உள்ள சாரத்தை கண்டுபிடிப்பது ரொம்ப கடினம்.

AR-Rahman

மற்ற இசையமைப்பாளர்களை பொருத்தவரை ட்யூன் கிடைத்துவிட்டால் அதற்கேற்ற வார்த்தைகளை போட்டு விடுவேன், ஆனால், ரகுமானின் இசை அப்படியல்ல முதலில் அவரது சாரத்தை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மாற்றம் செய்யுங்கள் எனக் கேட்டால் சில நேரங்களில் அவர் மறுத்துவிடுவார். ஆனால், அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு நான் வரிகளை எழுதுவேன் அப்போது தானே நல்ல பாடல் கிடைக்கும் என்று வைரமுத்து பேசியுள்ளார்.