மாடர்ன் உடை, படு ஸ்லிம் உடல் – ஆளே மாறிய அறந்தாங்கி நிஷா – பிக் பாஸ் ஜோடிகள் செட்டில் அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
6347
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ்.விஜய் டிவி பிரபலன்களான ரியோ, நிஷா, கேப்ரில்லா ஆகியோர் அர்ச்சனாவுடன் சேர்ந்து லவ் பேட் என்ற குழுவையும் ஆரம்பித்தனர். ஆனால், இந்த குழுவில் இருந்த யாரும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கவில்லை என்பது தான் சோகம். அதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா செய்த அன்பு பஞ்சாயத்து பலரையும் காண்டாக்கியது.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது மகனை காட்டிய ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர்- அட, அவர் மனைவியும் ஒரு நடிகை தானா.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அர்ச்சனா மற்றும் நிஷாவின் பல செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர். சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனா மற்றும் நிஷாவை கேலி செய்தனர.

Pic 3 | Bigg Boss Jodigal Photo Album: Shoot begins with fun and  celebration - Don't miss these pics!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நிஷா, ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் செட்டில் இருந்து நிஷா, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸில் இருந்ததை விட படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement