விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுவருகிறது.இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியல் இதுவரை 330 எபிசோடுக்கு மேல் கடந்துள்ளது. அதே போல இயக்குனர் பிரவீன் ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ச்சியை எடுத்து போல ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக திருமணம் சீரியல் புகழ் சித்துவும் ஹீரோயினாக ஆல்யா மானசாவும் நடித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க :பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல இருந்து நான் விலகப்போறேன்னு சொல்ல இதுதான் காரணம் – குமரன் அளித்த விளக்கம்.
இந்த சீரியலில் ஏற்கனவே இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் ரீ-மேக் தான். இருப்பினும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்தனை வெற்றி சீரியல்களை இயக்கிய பிரவீன் மனைவி வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை சாய் ப்ரோமோதிதா தான். இவர்கள் இருவரும் காதலித்த திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பிரவீன் பென்னெட் மனைவி சாய் பிரமோதிதா தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில் இரண்டாம் முறையாக கர்ப்பமான சாய் பிரமோதிதா வளைகாப்பு விழாவை விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் கண்ணம்மா சீரியல் சீரியல் குழுவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு சமீபத்தில் தான் இந்த தம்பதிக்கு இரண்டாம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரவீன் பேண்ட் அவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது மகனின் புகைப்படத்தை முதல்முறையாக பதிவிட்டுள்ளார்.