விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 12 வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா,அனிதா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர், அதில் ஜித்தன் ரமேஷும் ஒருவர். இயக்குனர் ஆர்.கே.வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ். அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர்.
நடிகர் ஜீவா அவர்களின் சகோதரரான இவர் ஜீவாவிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்தாலும், நடிகர் ஜீவா அளவிற்கு இவரால் பெயரெடுக்க முடியவில்லை. தமிழில் இதுவரை 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால், அந்த 10 படங்களும் தோல்வியில் தான் முடிந்தது.2011 ஆம் ஆண்டு வெளியான “ஓஸ்தி ” படத்திற்கு பின்னர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஒரு நடிகனின் வாக்கு மூலம் ” படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் நடித்த “ஜில்லா” படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு சில நொடிகளுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.
ப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதுவும் இவர் வெளியேறிய அதே வாரத்தில் நிஷாவும் வெளியேறி இருந்தார். ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை ஆரம்பத்தில் எந்த அணியிலும் சேராமல் தான் இருந்தார். அதன் பின்னர் அர்ச்சனாவின் லவ் பேட் கேங்கில் சேர்ந்தார். அதே போல இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை பல நேரங்களில் தூங்கி கொண்டும் மற்றவர்கள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டும் தான் இருந்தார் என்று பல மீம்கள் கூட வெளியானது.
இப்படி ஒரு நிலையில் இன்று புத்தாண்டு தினம் அன்று அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜித்தன் ரமேஷ் படுத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஆண்டவா இந்த வருஷமாவது இதே மாதிரி நிம்மதியா தூங்கணும்டா எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று பதிவிட்டு ஜித்தன் ரமேஷை டேக் செய்தும் இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், அவரு பாத்தா எவ்ளோ வரதுபடுவாரு. இப்படி எல்லாம் பண்ணாதீங்க. நீங்க விளையாட்டா பண்றது மத்தவங்கள பாதிக்குமா இல்லையான்னு யோசிச்சி பண்ணுங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த நிஷா, அவர் தப்பா எடுத்துக்கமாட்டாங்க விளையாட்டா தான் அவருக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.