அப்பா சாரிப்பா, அப்பா சாரிப்பா. இது உலக மகா நடிப்புடா சாமி – அர்ச்சனா மற்றும் நிஷாவின் ஓவர் நடிப்பை கலாய்த்த நடிகர்.

0
3903
archana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கில் அர்ச்சனா, கேப்ரில்லா, பாலாஜி, சோம் சேகர், ரம்யா பாண்டியன், ஜித்தன் ஆகிய 6 பேர் ரோபோவாக இருந்த போது இதில் பெரும்பாலானோர் அர்ச்சனாவை தான் டார்கெட் செய்தனர்.ஒரு கட்டத்தில் அர்ச்சனா சிரித்துவிட்டார் என்று ஒரு ஹார்டை பிரித்தனர். பின்னர் அவரிடம் இருந்து சோகம் அல்லது கோபம் என்று ஏதாவது உணர்வை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நிஷா எவ்வளவோ போராடினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் மறைந்த அர்ச்சனாவின் தந்தை கேட்டு அர்ச்சனாவை சோகமடையச் செய்ய முயற்சித்தார் நிஷா. ஆனால், அப்போதும் அர்ச்சனா அசரவே இல்லை. இருப்பினும் அவர் முகம் சுகமாகனது என்று மற்றொரு ஹார்ட்டையும் பறித்தனர், ஆனால், இந்த டாஸ்க்கின் போது கடுப்பான அர்ச்சனாவை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.

பின்னர் இந்த டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். ஆனால், அப்போதும் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை. பின்னர் நிஷா எப்படியோ அழுது புலம்பி எப்படியோ அர்ச்சனாவை சமாதானம் செய்தார். ஒரு கட்டத்தில் மழை பெய்ய அதை பார்த்த அர்ச்சனா, இந்த மழை தான் எங்க அப்பா என்று கூற, அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா, அப்பா என்று நிஷா ஒரு ஆஸ்கார் பெர்மார்மன்ஸையே செய்தார்.

-விளம்பரம்-

ஏற்கனவே, நிஷா மற்றும் அர்ச்சனா இருவரும் அன்பு ஜெய்கும்னு நம்பரயா என்று கேட்டதற்கு நம்புறேன் என்று சொன்னதே சமூக வலைதளத்தில் பெரும் கேலியாக மாறியது. இப்படி ஒரு நிலையில் நேற்று நடந்த இந்த விஷயத்தை நடிகரும் நடிகை சுஜா வருணியின் கணவருமான சிவகுமார் ‘அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா? சொல்லு அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா? அப்பா சாரிப்பா, அப்பா சாரிப்பா. இது உலக மகா நடிப்புடா சாமி என்று பதிவிட்டிருக்கிறார்’ அதே போல நடிகரும் நடன இயக்குனருமான சதிஷ், நடிகை ஸ்ரீப்ரியா என்று பலரும் இந்த விஷயத்தை கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Advertisement