நீ வேண்டாம்னா நான் எங்கடா போவேன் – பாலாஜியிடம் கதறி அழும் அர்ச்சனா.

0
3816
archana
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தியால் மட்டுமே அவ்வப்போது பிரச்சினைகள் தலை தூக்கி வந்தது. ஆரம்பத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதாவின் எச்சில் பஞ்சாயத்து வெடித்தது. அதன் பின்னர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே ஒரு டாஸ்கின் போது பிரச்சனை ஏற்பட பின்னர் அந்த பிரச்சனை வாடா போடா என்று அளவுக்கு மாறியது. ஆனால் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி அர்ச்சனாவால் ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்துகொண்டே இருக்கிறது. அதிலும் கடந்த சில தினங்களாக அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி. பாலாஜியின் இந்த பேச்சுக்கள் ரியோ மற்றும் அர்ச்சனா ஆகியோர் மத்தியில் கொஞ்சம் கடுப்பை கிளப்பியது.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா, பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் கேப்டன். இன்னும் 4 நாட்கள் உங்களுக்கு புடிக்கிதோ இல்லையோ நீங்க செஞ்சி தான் ஆகணும்’ என்று கடமையாக பேசி இருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாது உடன் இருந்த ரியோ கூட பாலாஜியை கார்னர் செய்தார். இதையடுத்து பாலாஜி, தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு அழுதார். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா பாலாஜியிடன் அழுது புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement