அன்பு ஜெய்க்கும்னு நம்பறயா – அர்ச்சனா மகளிடம் கேட்ட நபருக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க.

0
16680
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் கமல். இதில் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் 2 எவிகஷன் செய்து லவ் பெட்டின் உறுப்பினர்கள் குறைக்கப்பட்டனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-122.jpg

கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.

இதையும் பாருங்க : பாவக் கதைகளில் கலக்கிய ‘நரிக்குட்டி’ யார் தெரியுமா ? அட இவரு தாங்க விஜய் டிவில வந்த பையன்.

- Advertisement -

இதில் எதிர்பார்த்தது போலவே நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று தான் அர்ச்சனா இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுள்ளார். அதில் ‘என்னோட பாஸி குமாரு வந்துட்டாரு, கடவுள் இருக்கான் குமாரு’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கீழே, நெட்டிசன் ஒருவர் ‘அன்பு ஜெயிக்கும்னு நம்பறயா’ என்று கமன்ட் செய்ததற்கு அர்ச்சனாவின் மகள் ‘கண்டிப்பா’ என்று பதில் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement