பாவக் கதைகளில் கலக்கிய ‘நரிக்குட்டி’ யார் தெரியுமா ? அட இவரு தாங்க விஜய் டிவில வந்த பையன்.

0
2422
jaffer
- Advertisement -

சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதையில், தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். 

- Advertisement -

இதில் லவ் பண்ண உட்றனும் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு மகள் (அஞ்சலி), தன்பால் ஈர்ப்புடையவள். அவளுக்கு என்ன நேர்கிறது என்பதுதான் மீதிப் படம். இந்த கதையில்  அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்த கதையில் வில்லணையே மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நரிக்குட்டி என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் லெஸ்பியனுக்கு பதில் இவர் ‘ESPN’னா என்று கேட்கும் காட்சிகளில் இவரது நடிப்பை கண்டு பலரும் சிரித்தனர். ஆனால், இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று ஒரு சிலருக்கும் தோன்றி இருக்கலாம். இவர் வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2’ வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்த ஜாபர் தான் இந்த நரிக் குட்டி.

-விளம்பரம்-
Advertisement