ஓவர் ஆக்ட்டிங், ஓவர் Mature – கேலி செய்த்தவருக்கு அர்ச்சனா மகள் சாரா பதிலடி.

0
5436
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் அளவு Transperant வெள்ளை டி-ஷர்டில் சீரியல் நடிகை நிவிஷா கொடுத்த போஸ்.

- Advertisement -

மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்பதில் சந்தோசம் என்று கூறி இருந்தார் அர்ச்சனா. அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டதால் அவரை விட அவரது மகள் தான் சமூக வலைதளத்தில் பலவற்றை எதிர்கொண்டு வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

This image has an empty alt attribute; its file name is image-29.png

ஆரி, மண்டியிட்டு சல்யூட் அடித்தார். இப்படி அவர் சொல்லியும் சமூக வலைதளத்தில் இருக்கும் நெகட்டிவிட்டி குறைந்தபாடில்லை. . இவர் தனது வயதுக்கு தகுந்தார் போல் பேசாமல், வயதை மீறி பேசுவதாகவும் ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுவதாகவும் நெட்டிசன்கள் சமீபத்தில் சாராவை விமர்சித்தனர்.இதற்கு பதில் அளித்துள்ள சாரா, ” என்ன பாக்காம, என்கிட்ட பேசாம இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் நா என்ன சொல்றதுன்னு தெரில. டேக் கேர்” என நாசூக்காக பதிலடி கொடுத்தார். அதே போல வேறு ஒரு நெட்டிசன், ஓவர் மெச்சுர்டுன்னு காட்ட நீங்க சீன் போடுறீங்கனு சொல்றாங்களே உண்மையா என கேட்டதற்கு, என்னால முடியல சார், விட்ருங்க எமோஜியுடன் வேடிக்கையாக ரிப்ளை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement