அர்ச்சனா அடிக்கடி அப்படி சொல்கிறாரா என்ன ? கேள்வி எழுப்பிய ஸ்ரீபிரியா.

0
1910
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி சுசித்ரா சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

- Advertisement -

ஆனால், முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனாஎப்படியோ இன்னமும் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து வருகிறார். மேலும் இவருக்கென்று ஒரு அன்பு கேங், லவ் பேட் என்று உருவாக்கிக் கொண்டு தனக்கான ஒரு ராஜாங்கத்தை உள்ளே வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் கூட இவரது அன்பு சென்டிமென்டை பாலாஜி போட்டு உடைத்தார். சமீபத்தில் கூட இவரது அன்பு கேங்கில் சேர்த்துக் கொள்ள கொக்கி போட்டார் அர்ச்சனா ஆனால் அவர் சிக்கவில்லை. இப்படி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் அன்பு வைத்து கேம் ஆடிவரும் அர்ச்சனாவை நடிகையும் மக்கள் நீதி மைய கட்சியின் உறுப்பினருமான நடிகை ஸ்ரீபிரியா கலாய்த்திருக்கிறார்.

நடிகையான ஸ்ரீப்ரியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீவிர பின் தொடரியாக இருந்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம் இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா குறித்து ட்வீட் போட்டு உள்ள ஸ்ரீபிரியா, அர்ச்சனா அடிக்கடி சத்தியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்ன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இவர் சொல்வது போலத்தான் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சாப்பாட்டு மீதும் குழந்தைகள் மீதும் சத்தியம் வைத்து தான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement