அஸ்வின் சொன்னா தப்பு, ஆயிஷா சொன்னா தப்பில்லை – ஆயிஷாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
579
ayesha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் சீரியல் துணை இயக்குனர்களை குறித்து ஆயிஷா பேசியிருக்கும் மோசமான கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி நான்கு நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி , விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர்.பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம்.
ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ஆயிஷா.

- Advertisement -

ஆயிஷா நடித்த சீரியல்கள்:

இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான`பொன்மகள் வந்தாள்’ சீரியலில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.பின் சீரியலில் ஆயிஷாவுக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தொடரில் இருந்து ஆயிஷா விலகினார். அதன் பின்பு மாயா என்ற சீரியலில் நடித்தார் . அந்த தொடர் மூலம் ஆயிஷா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கும் சத்யா என்ற தொடரில் ஆயிஷா நடித்து இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா:

இந்த தொடரில் ஆயிஷா ஆணாக நடித்து பெண்களுக்கு இருக்கும் தனம்பிக்கையை வலுப்படுத்தும் படி நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாது வேறு மொழி சீரியலிலும் பிஸியாக நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றுகிறார். ஆரம்பத்தில் இருந்தே ஆயிஷா போட்டியாளர்களிடம் மச்சி, மாமா,வாடா என்று கூப்பிட்டு ஓவராக நடந்து கொண்டிருக்கிறார். இதனால் அசலுக்கும், ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதோடு பிக் பாஸ் ஓவியாவை போல் முயற்சி செய்கிறேன் என்று ஏதாவது ஒன்றை ஆயிஷா செய்து ரசிகர்கள் மத்தியில் திட்டு வாங்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

இயக்குனர்கள் குறித்து ஆயிஷா சொன்னது:

எல்லோரிடமும் ஜாலியாக பேசுகிறேன் என்று சண்டை வாங்குவது, நடிப்பது போன்ற பல தில்லாலங்கடி வேலைகளை ஆயிஷா செய்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் சீரியல் இயக்குனர்கள் குறித்து ஆயிஷா பேசி இருப்பது, சீரியலின் படப்பிடிப்பின் போது நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பேன். அது மட்டும் இல்லாமல் காலால் எட்டி கூட உதைத்திருக்கிறேன். இதனாலே பல துணை இயக்குனர்கள் என்னை எழுப்ப பயப்படுவார்கள் என்று பிற போட்டியாளர்களிடம் ஜாலியாக ஆயிஷா பேசியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இப்படியெல்லாம் ஒருவரை அவமரியாதையாக நடத்துவதை திமிராக நிகழ்ச்சியில் சொல்கிறாயா? என்றெல்லாம் ஆயிஷாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.

மேலும், அஸ்வின் எதார்த்தமாக இயக்குனர் குறித்து பேசியதை கேலி செய்தவர்கள், இப்படி தன்னுடைய இயக்குனர்களை அடிப்பேன் என்று சொல்லும் ஆயிஷாவை ஏன் எதுவும் சொல்லவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்னொரு வீடியோவில் பேசி இருக்கும் ஆயிஷா ‘இதெல்லாம் ட்ரைலர் தான்மா, கண்ணாடியை எடுத்து என்னையே கிழித்துக்கொள்வேன். என்னை நானே கடிப்பேன்’ என்றும் பேசி இருக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் ‘ஆயிஷாவிற்கு எதாவது பிரச்சனையா’ என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement