கமல் சாரை அவமதித்தேனா ? அசீம் வெளியிட்ட விளக்க வீடியோ. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
699
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

இந்த சீசனில் பல முறை அஸீமிற்கு கமல் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதே போல அசீம் மற்றும் விக்ரமனுக்கு சண்டை வரும் போதெல்லாம் விக்ரமனுக்கு தான் கமல் பல இடங்களில் ஆதரவாக பேசி வந்தார். அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார்.

அசீம் பட்டத்தை வென்றது கமலுக்கே பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். மகேஸ்வரி கூட இதே கருத்தை முன்வைத்தார். இப்படி ஒரு நிலையில் அசீம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது தனது மகன் குறித்த மீம் ஒன்று காண்பிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த அசீம் ‘எனக்கு எல்லாமே என் பையன் தான். இந்த நிகழ்ச்சியில் இப்படி கோபப்படுகிறீர்களே உங்களை பார்த்த உங்கள் மகன் என்ன நினைப்பான் என்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

ஏன்டா, என் மகன் கூட நேரத்தை செலவழிக்க பல ஆயிரம் மணி நேரம் இருக்கிறதுடா. அந்த ஷோவை பார்த்து தான் என் மகன் வளர வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார். அஸீமின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் பலரும் ‘கமல் சார் தான் அடிக்கடி அசீம் மகன் குறித்து அஸீமிற்கு அறிவுரை கூறி வந்தார். எனவே கமலை தான் அசீம் இப்படி பேசி இருக்கிறார்’ என்று புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து அசீம் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அவர் ‘இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்று ஃபேன்ஸ் மீட் ஒன்றை நடத்தி இருந்தார்கள். அப்போது ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் அளித்திருந்தேன். அந்த வீடியோவை பகிர்ந்து நான் ஏதோ கமல் சாரை பேசியது போல என்னை மிகவும் பிடித்த ஹீட்டர்கள் தேவையில்லாமல் ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். கமல் சார் எனக்கு சொன்னது முழுக்க முழுக்க என்னுடைய நல்லதற்காக சொன்ன விஷயம்.

என் மகன் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பான் அதனால் கவனமாக விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு வாரமும் எனக்கு நல்லது தான் சொன்னார். ஆனால், அந்த விஷயத்தை நான் ஆடியன்ஸ்க்கு சொன்னதை கமல் சாரை சொன்னதை போல தவறாக சித்தரித்து போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கு எல்லாம்அஞ்சர ஆள் நான் இல்லை. கமல் சாரை நான் மிகவும் மதிக்கிறேன், அவர்களுடைய தந்தை போன்றவர். எனவே தேவையில்லாமல் இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement