மீண்டும் ஷிவினை மோசமாக கமண்ட் செய்த அசீம் – வீடியோவை பகிர்ந்து கண்டிக்கும் ரசிகர்கள்.

0
314
azeem
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு மாதம் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி என தொடக்கத்தில் இருந்த 21 போட்டியாளர்களில் 5 போட்டியாளர்கள் போக தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒரே பிக் பாஸ் வீட்டை பார்த்த நமக்கு ஆச்சிரியமூட்டும் வகையில் அரண்மை போல மாற்றப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

மேலும் போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க்கானது வழங்கப்பட்டு அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சித்தா, இளவரசராக மணிகண்டனும், ஜனனி இளவரசியாகவும், விக்ரமன் ராஜகுருவாகவும், ஏடிகே அருங்கட்சியாக தலைவராகவும், ராம் கண்தெரியாதவராகவும், தனலட்சிமி கதை அளக்கும் அளக்கவும், ஆயிஷா உறங்கும் நபராகவும், பாதுகாவலராக கதிர், நிவாஷினி, குயின்ஸி, ஷிவின்,அமுதவாணன் இருந்தனர் மேலும் மைனா காது கேளாதவராக என்று ஒவொருவருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது.

- Advertisement -

கொடுக்கப்பட்ட டாஸ்க் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க விக்ரமன் மற்றும் அசீம் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த பெரிய சண்டையிலும் சில குயூட் காட்சிகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் படைத்தளபதியான அசீம் மற்றும் ரட்சித்தாவை தனித்தனியாக அழைத்து அரசகுடும்ப கஜானாவை திருடி நிரப்பும் டாஸ்க்கை கொடுத்திருந்தார். மேலும் அந்த டாஸ்கில் இவர்கள் இருவரும் மற்ற போட்டியாளர்களுக்கு தெரியாமால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொருட்களை ஒரு உதவியாளரின் மூலம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திருடி வீட்டிற்கு வெளியில் இருக்கும் குகைக்குள் போட வேண்டும் என்பது டாஸ்க்.

இந்நிலையில் ரட்சிதா மற்றும் அசீம் கலந்து பேசி போட்டியாளர்களில் ஒருவரான ராமிடம் இந்த திருடும் வேலையே ஒப்படைத்தார். ராம் பல தந்திரங்களை செய்து பொருட்களை திருடி பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருக்கும் குகைக்குள் சேர்த்தார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பொறுக்காத ராஜ ராபர்ட் ராமை கயிற்றால் கட்டிப் போடும்படி உத்தரவிட்டார். இதனால் ராம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் கட்டிபோடப்பட்டு காவலாக இளவரசனான மணிகண்டன் மற்றும் படைத்தளபதி அசீம் காவல் காத்தனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலேயே மற்றவர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் யார் என்றால் அது திருநங்கை ஷிவின்தான். இவர் எப்போது எல்லாரிடமும் அன்போடு பழகுவார் `அதுமட்டுமில்லாமல் தான் சொல்லவந்த கருத்துக்களை தைரியமாக சொல்லும் இவரை மற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஒரு டாஸ்கில் கூட இவருக்கு அதிக பச்சை முத்திரை கொடுத்திருந்தனர். இப்படடிப்பட்ட ஷிவினை தற்போது போட்டியாளரான அசீம் இவருக்கு மொட்டை அடித்து விடலாமா என சொன்னது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

இதற்க்கு முன்னர் ஏற்கனவே திருநங்கையான ஷிவினை உருவக்கேலி செய்திருந்த அசீம் மீது அதிக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலஹாசன் கூட அசீமை கடுமையாக திட்டி ஷிவினிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். இந்நிலையில் மீண்டும் ஷிவினுக்கு மொட்டை அடித்து விடலாம் என்று உருவாக்கேலி செய்து பேசியிருக்கிறார். இவர் இப்படி பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து திட்டி வருகின்றனர்.

Advertisement