‘தன்னை அழகன் என்று என்னும் Boomer Uncle’ – அசீம் செயலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
465
azeem
- Advertisement -

பிக் பாஸ் அசீமை ரசிகர்கள் கிண்டல் கேலி செய்யும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அசீம்.

- Advertisement -

அசீம் குறித்த தகவல்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அசீம். இவன் முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் இவர் நடித்த பகல் நிலவு சீரியல் ரசிகர்கள் மதில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதற்கு பிறகு இவர் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். கடைசியாக, இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற தொடரில் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இந்த சீரியலும் முடிவடைந்தது.

பிக் பாஸ் வீட்டில் அசீம் :

இதனை அடுத்து தற்போது அசீம் அவர்கள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்களிடம் திமிராகவும், அடாவடி தனமாகவும் நடந்து கொண்டிருக்கிறார். ஆனால், பெண் போட்டியாளர்களும் இவர் வலிந்து கொண்டும், சிரித்து பேசிக் கொண்டும் இருக்கிறார். அதிலும் இவர் குயின்சியிடம் ரொம்ப வலிந்து வலிந்து பேசுகிறார். இந்நிலையில் அசீம், குயின்சி இடம் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், குயின்சி இடம் அசீம், நம்ம பிரண்டஸ் தானே என்று கேட்டார். உடனே குயின்சி, ஆமாம் என்று சொல்கிறார்.

-விளம்பரம்-

அசீம்-குயின்சி வீடியோ:

அதற்கு பாய் பிரெண்டா? என்ன என்று அசீம் கேட்டவுடன், வெறும் பிரண்ட் தான் நீங்கள் பாய் அவ்வளவு தான் தவிர பாய் பிரண்ட் கிடையாது என்று குயின்சி சொல்கிறார். இது எல்லாம் பேசி முடித்து கடைசியில் சும்மா தான் சொன்னேன் என்று அசீம் சொல்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே அசீமை கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள். ஏற்கனவே அசீம், குயின்சியிடம் நாம ஜோடி சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும். நம்ம நடனத்தை 20 பேர் பார்ப்பதாக நினைக்கவில்லை.

கிண்டல் செய்யும் ரசிகர்கள்:

ஆறு கோடி பேர் பார்ப்பார்கள் என்று தான் நான் நினைத்து ஆட போகிறேன் என்றெல்லாம் பேசுகிறார். ஆனால், குயின்சி நான் வேறு ஒருவருடன் நடனமாடுகிறேன் என்று முடிவை மாற்றிவிட்டார். பின் அசீம் செரினாவுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார். அசீம் நடனத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்து இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து குயின்சியும் இதற்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தாரா? என்றெல்லாம் கிண்டல் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்களுமே அசீமுக்கு பெரிய பல்பு! என்றெல்லாம் கேலி செய்திருந்தார்கள்.

Advertisement