அசீம் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 46 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி என 21 போட்டியாளர்களில் இருந்து 6 போட்டியாளர்கள் போக தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீதான குற்றங்களை குறித்து விவாதம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் அசீம் வக்கீலாக வாதாடி இருக்கிறார்.
அசீம் குறித்த தகவல்:
சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் அசீம். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் முக்கிய கட்சியின் உறுப்பினராகவும் இருந்தவர். இவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் :
தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார். மேலும், அசீம் இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு இருக்கிறார். அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். பின் விக்ரமனிற்கும் அசிமிற்கும் இடையே செட்டே ஆகவில்லை.
கோர்ட் டாஸ்க்:
எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். இதனால் கமல், அசிமை வெளுத்து வாங்கி இருந்தார். இப்படி அசீம் வாரம் வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். இருந்தாலும், கமல் திட்டியதற்கு பிறகு அசீம் உடைய நடவடிக்கைகள் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டதில் அசீம் வக்கீலாக இருக்கிறார். இவர் கதிரவனை கைது செய்து காலில் விலங்கு போட்டு சாவி மறைத்து வைத்த கேஸ் குறித்து விவாதம் செய்கிறார்கள். அப்போது அசீம் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.
அசீம் எழுதிய கடிதம்:
அந்த கடிதத்தை தான் தற்போது அசீம் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து அசீம் கையெழுத்து எவ்ளோ அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்து வருகிறார்கள் .ஆனால், அந்த கடிதத்தை படித்து பார்த்த பிறகுதான் அவருடைய தமிழ் பற்றி தெரிந்தது. எப்போதுமே, அசீம் தமிழ் மீது அதிக ஆர்வம், பற்றுடையவர். நான் தான் தமிழில் அதிகம் பேசிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், அந்த கடிதத்தில் நிறைய எழுத்துப் பிழைகளை செய்திருக்கிறார். சொன்னாருக்கு சென்னார், அபாண்டமாக, காழ்புணர்ச்சி போன்ற பல வார்த்தைகளை தவறாக எழுதி இருக்கிறார். இப்படி இவர் எழுதியிருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி இதுதான் தமிழ் மீது பற்றா? இப்படி தான் எழுதுவதா? என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.