Rulesஅ பிரேக் பண்ண தான் வந்திருக்கோம் – அஸீமுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த வனிதா.

0
381
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன்கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

- Advertisement -

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நெகடிவ் விமர்சங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டு இருந்த அசீம், ‘எம் மக்களுக்கு வணக்கம், சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம்.நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல, நன்றி ‘ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் வனிதாவை சந்தித்து இருக்கிறார் அசீம். அந்த புகைப்படத்தை பகிர்ந்த வனிதா ‘இங்கே யாருக்கும் முன் உதாரணமாக இருக்க வரவில்லை. விதிகளை உடைக்க வந்து இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே வனிதா அஸீமிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அடிக்கடி விக்ரமனை கடுமையாக விமர்சித்து வந்தார். சமீபத்தில் கூட விக்ரமனுக்கு வாக்களிக்க சொல்லி திருமாவளவன் பதிவை ஒன்றை போட்டு இருந்தார்.

இது பெரும் விவாதகமாக மாறியது. இதனை விமர்சித்த வனிதா ‘இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்…ஒரு மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யும், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்கள் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும் ? மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் நாடகம், பொதுமக்களின் அன்பு மற்றும் பாசத்துடன் விளையாடுவதற்கு மைண்ட் கேமைப் பயன்படுத்துகிறார்

அரசியல் நோக்கங்களுக்காக. கமல்ஹாசன் தனது கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிக்கவோ அல்லது தனது கட்சிப் போட்டியாளரான சினேகனை ட்விட்டரில் ஆதரிக்கவோ கேட்பதில்லை.. விக்ரமன் வெற்றி பெற்றால் அது அரசியல் ஆதரவு மற்றும் சமூக ஆதரவால் மட்டுமே, பார்வையாளர்கள் அல்லாத வாக்குகள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement