இரண்டு முறை சொல்லிவிட்டு, சொல்லவே இல்லை என்று ஆரியிடம் வாதாடிய பாலாஜி – குறுப்படம் இதோ.

0
15016

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து ஐந்தாவது துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையிலான பிரச்சனை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள்கிழமை ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். ஆனால் நீதிபதியாக இருக்கும் சுஜித்ரா மற்ற போட்டியாளர்கள் இடம் கருத்துக்கணிப்பை கேட்டு தீர்ப்பு வழங்குவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் சுசித்ரா வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் அப்படி தான் வழங்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க நேற்றைய சம்யுக்தா மற்றும் ஆரி பஞ்சாயத்து நடந்தது இதில் சம்யுக்தாவிற்கு ஆதரவாக பாலாஜி பேசிக்கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போது பாலாஜி சொன்ன பெரும்பாலான பிரச்சனைகள் ஆரியை தனிப்பட்ட முறையில் தாக்குவது போலத்தான் இருந்தது. மேலும், எதிர்பார்த்தது போல இந்த பிரச்சனையில் சம்யுக்தாவிற்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என்று கணக்கெடுப்பை எடுத்து பின்னர் சம்யுக்தாவிற்கு ஆதரவாக இந்த தீர்ப்பை வழங்கி இருந்தார் சுசித்ரா. இந்த பஞ்சாயத்து முடிந்த பின்னர் ஆரிக்கும் பாலாஜிக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதில், பாலாஜி தான் எச்சரிக்கை கொடுத்ததாக எதற்காக கூறினார் என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஆரி.

ஆனால் தான் எச்சரிக்கை என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை என்று பாலாஜி ஆணித்தரமாக கூறினார். ஒருகட்டத்தில் இவருக்கும் பாலாஜிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் விசாரணையின் போது பாலாஜி வார்னிங் என்ற சொல்லை பயன்படுத்தினார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் பாலாஜி அப்படி சொன்னது பிக்பாஸ் விதிகளுக்கு புறம்பானது என்றும் பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை நெட்டிசன்கள் குறும்படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-

Advertisement