இதெல்லாம் கண்டிப்பா போட மாட்டாங்க – பேசி கொண்டு இருக்கும் போதே கேலி செய்துள்ள சம்யுக்தா. Video இதோ.

0
53861
samyuktha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பிழிந்து வரும் டிராமாக்களை தாங்க முடியாமல் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள்இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் கடந்த மூன்று வாரங்களாக சண்டைகளும் மற்றும் சென்டிமென்ட்டும் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதிலும் அனிதா சம்பத் அடிக்கடி தன்னுடைய கணவரை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டு வருகிறார்.

அதற்கு ஏற்றார் போல அடிக்கடி போட்டியாளர்களை அழ வைப்பதற்காகவே பிக்பாஸ் ஏதாவது டாஸ்க்கை கொடுத்து விடுகிறார். முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை என்ற டாஸ் கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்களை கூறி அழுதார்கள். அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் கூட போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். பிக்பாஸ் அப்போது அனைவருமே தாங்கள் செய்யும் நபர் குறித்து கூறி கண்ணீர் மல்க அழுதார்கள். அதிலும் அனிதா சம்பத் பேச்சை தாங்க முடியாமல் சம்யுக்தா போதும் என்று நிறுத்தியே விட்டார்.

- Advertisement -

ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத்திற்கு மட்டும் இப்படி நடக்கவில்லை சனம் ஷெட்டிக்கும் இதே நிலை தான் நடந்திருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி பேசிக்கொண்டு இருக்கும்போது பாலாஜி தலையணையை வைத்து படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார். அதேபோல சம்யுக்தா இதெல்லாம் கண்டிப்பாக போட மாட்டாங்க என்று சனம் ஷெட்டி காதில் விழும் படி சொன்னார். ஆனால், அப்போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தான் சனம் செட்டி பேசியிருந்தார். ஏற்கனவே சனம் ஷெட்டிக்கு பாலாஜி முருகதாஸ் மற்றும் சமந்தாவிற்கு இடையே கொஞ்சம் பிரச்சினை சென்று கொண்டுதான் இருக்கிறது.

தங்கச்சுரங்கம் டாஸ்க் போது கூட சனம் ஷெட்டி இடம் சம்யுக்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார். அதேபோல நேற்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சனம் செட்டி அர்ச்சனாவை பற்றி சொன்ன எலுமிச்சை பஞ்சாயத்தை அனைவர் முன்பும் போட்டுடைத்து சனம் ஷெட்டியை அசிங்கப்படுத்த பார்த்தார் பாலாஜி. இதனால் கோபமடைந்த சனம் ஷெட்டி பாலாஜியிடம் கொஞ்சம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பாலாஜி மைக்கை கழட்டி சனம் ஷெட்டி இடம் மிகவும் கோபமாக பேசினார் பாலாஜி. இதையெல்லாம் பார்க்கும்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் குரூப்பீஸம் தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement