ஆரியை பற்றி ஆஜீத்திடன் ஒரு பேச்சு, ஷிவானியிடம் ஒரு பேச்சு – இப்படி ஒரு பொறாமை இருக்க கூடாது பாலா.

0
4597
bala
- Advertisement -

இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால், கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக பழகி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆரியை பற்றி பாலாஜி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டு தான் வருகிறார். நேற்றய நிகழ்ச்சியில் ஆரியின் குடும்பத்தார் வந்து சென்ற பின்னர், ஆஜித்துடன் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தார் பாலாஜி. அப்போது யார் இந்த சீசனை ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது பாலாஜி பேசுகையில், இந்த சீசனில் நான் ஜெயித்தால் ஒரு ட்ரெண்ட் செட்டாகா இருக்கும். அமைதியாக அமர்ந்தாள் மட்டும் டைட்டிலை ஜெயிக்க முடியாது இறங்கி விளையாடினாள் தான் ஜெயிக்க முடியும் என்ற ஒரு ட்ரெண்ட் செட் உருவாகும். அதிலும் சோம் ஒத்துக்க மாட்டேன் ரியோவை ஒத்துக்க மாட்டேன் நான் இப்போ இந்தமுறை ஜெயிப்பேன் என்று சொல்லவில்லை நான் இல்லை ஆரி ஜெயித்தால் அது இந்த ஆட்டத்தோட போக்கை மாற்றி அமைக்கும். இதுக்கு முன்னாடி ஜெயிச்சவங்களை பார்த்தால் ஒக்காந்து கடலை தான் சாப்பிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துக்கு மேல் இறங்கி விளையாடினாள் தான் ஜெயிக்க முடியும் என்று மாறினால் வேற லெவல்ல இருக்கும் அந்த ஷோ எப்படி போகும் என்று கூறி இருந்தார் பாலாஜி.

- Advertisement -

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் ஷிவானியுடன் பேசிக்கொண்டு இருந்த பாலாஜி., ஆறு எல்லாம் ஒக்காந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கதைகளை கேட்பவர். அவருக்கு அந்த பொறுமை இருக்கிறது. எங்கே எப்படி பேசவேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், எனக்கு அது சுத்தமாக கிடையாது. அந்த புரிதல் சாதாரண மனிதனுக்கு வராது என்னை போன்ற யாருக்கும் வராது. எங்கே என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எதைப் பேசினால் ரீச் ஆகும் என்று. ஆனால், அவர் பக்கம் என்னவெல்லாம் தவறு இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு எனக்கு ஒரு பக்குவம் இருக்கிறது. அவருக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு விஷயத்தை மறைக்கும் போது அவரது நேர்மை என்னவென்று தெரிந்து விட்டது.

கேப்டன் டாஸ்கில் அவரை வீழ்த்தி கேப்டனாக வந்தபோதே கேமராவுக்கு முன்னால் சென்று நான்தான் விட்டுக் கொடுத்தேன் என்று அவர் சொல்லும்போது அவரது எண்ணம் புரிந்து விட்டது. உண்மையான ,மற்றவர்களை விட அவர் தான் உண்மையான பிக் பாஸ் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். எத்தனை இடத்தில் நான் எனக்காக பேசாமல் இருந்திருந்தால் வெளியில் நான் எப்படி ப்ரொஜெக்ட் ஆகி இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். அவர் மற்றவர்களை பாராட்டுவது காட்டுவது போல ஏதாவது ஒன்றை சொல்லி விட்டுப் போய்விடுவார். அவரை நல்லவராகவும் ஏத்துக்க முடியவில்லை கெட்டவராகவும் ஏத்துக்க முடியவில்லை. இந்த வீட்டில் யார் கப்பு ஜெயித்தால் வருத்தப்படுவேன் என்றால் அது ஆரி தான். இதை நான் கமல் சாரிகிட்ட கூட சொல்வேன்.

-விளம்பரம்-

ஷிவானியிடம் ஆரி பற்றி இப்படி பேசும் பாலாஜி கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் தான் ஆஜீத்திடம் நான் அல்லது ஆரி ஜெயித்தால் இந்த ஆட்டம் மாறும் என்று கூறி இருந்தார் பாலாஜி. இப்படி பாலாஜி மாறி மாறி பேச காரணமே உள்ளே சென்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் சிலர் ஆரியை பாராட்டியது தான். அதிலும் ஷிவானியின் அம்மா உள்ளே சென்ற போது பாலாஜியிடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஆரியிடம் சென்று நீங்கள் சூப்பரா விளையாடுறீங்க என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement