அம்மான்ற வார்த்தைய வச்சி கேம் ஆடினவன் எல்லாம் பேசுற பேச்சா இது – பாலாஜியின் பதிவை விமர்சித்த பிரபலம்.

0
5667
balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜி தன்னுடைய சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது அம்மா குறித்து பதிவிட்டுள்ள பாலாஜி, என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அன்பார்ந்த யூடுயூப் வாசிகளே என்னை மட்டம் தட்டி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உங்க அம்மாவிற்கு உணவளியுங்கள். அதை நான் எப்போதும் செய்ய மாட்டேன். என்னுடைய வலி தான் உங்களுக்கு உணவு என்றால் அந்த வலியை நான் எப்போதும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

balaji

பாலாஜியின் இந்த பதிவை பகிர்ந்த ஜோ மைக்கேல், அம்மான்ற வார்த்தைய வச்சி கேம் ஆடி வந்தவன் எல்லாம் பேசுற விஷயமா இது. இதுவும் உங்க அம்மா உனக்கு போட்ட பிச்சை தான் தம்பி என்று பதிவிட்டுள்ளார். கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். இப்படி ஒரு நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜோ மைக்கேல் பாலாஜி மீது மான நஷ்ட ஈடு தொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement