பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை வெளிக்காட்டிய பாலாஜி – இவர் தானா அது. குஷியில் ரசிகர்கள்.

0
34222
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால், உண்மையை சொல்லப்போனால் இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமாக சென்றதற்கு காரணமே பாலாஜி என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

பிக் பாஸுக்கு பின்னரும் பாலாஜி ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்றை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது இதுநாள் வரை பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று குழம்பி வந்த ரசிகர்களுக்கு பாலாஜி தெளிவுபடுத்தி விட்டார்.பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் பேசும் அந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது மர்மமாகவேஇருந்து வந்தது. அது யார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருந்து.அவ்வளவு ஏன் கடந்த சீசனில் லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-41.png

அந்த புகைப்படத்தில் இருப்பது தான் பிக் பாஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் கூட பிக் பாஸ்ஸின் முகம் தெளிவாக தெரியவில்லை.இருப்பினும் அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் ஒரு இளமையான நபராக தான் தெரிந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சுதாநந்தம். இவருடைய பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் இவர் பாலிவுட் வரை வேலை செய்து இருக்கிறாராம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அவரே பிக் பாஸ் குரலில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் நீங்கள் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா என்று கமன்ட்களை அள்ளி வீசி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி, என்ன அண்ணா எப்படி இருக்கீங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாலாஜியின் இந்த பதிவால் இவர் தான் பிக் பாஸ் என்று உறுதிபடுத்தி கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Advertisement